மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 விடுபட்டவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அப்டேட்!..
Magalir Urimai Thogai Recent Update Oct 12
Magalir Urimai Thogai Recent Update Oct 12 கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகத்தின் மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொருளாதார பகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கூறிய தகவல்:
தற்போது மகளிர் உரிமைத்தொகை தொடர்பாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கலைஞர் மகள் உரிமைத்தொகை திட்டமானது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. கலைஞர் மகள் உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் எனவே இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றும் விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
எனவே இது பொது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.